சென்னிமலை முருகன் கோவிலில் இரவு 11 மணிவரை நடை திறப்பு
ADDED :2408 days ago
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில், சித்ரா பவுர்ணமி விழா, நாளை மாலை கொண்டாடப்படுகிறது. இதற்காக, இரவு வரை, கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும். சென்னிமலை சுப்பிரமணியசுவாமி மலைக்கோவில்ல, நாளை சித்ரா பவுர்ணி விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மதியம், 3:30 மணியளவில் சிறப்பு ஹோமம் நடக்கிறது. அதை தொடர்ந்து மூலவர் முருகப்பெருமானுக்கு சந்தன அபிஷேகம், மாலை, 6:00 மணிக்கு மஹா தீபாராதனை, 6:30 மணியளவில் உற்சவர் புறப்பாடு நடக்கவுள்ளது. பக்தர்களின் தரிசனத்திற்காக, இரவு 11:00 மணி வரை, கோவில் நடை திறந்திருக்கும் என, செயல் அலுவலர் அருள்குமார் தெரிவித்துள்ளார்.