புட்லாய் அம்மன் கோவிலில் விளக்கு பூஜை
ADDED :2408 days ago
பாகூர்: தவளக்குப்பம் அடுத்துள்ள தானாம்பாளையம் புட்லாய் அம்மன் கோவிலில், 11ம் ஆண்டு 108 திரு விளக்கு பூஜை நடந்தது. இதனையொட்டி, காலை 9.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலை 5.30 மணிக்கு மகா கணபதி பூஜையும் நடந்தது. தொடர்ந்து, 6.00 மணிக்கு 108 திரு விளக்கு பூஜை நடந்தது. இதில், பெண்கள் கலந்து கொண்டு உலகம் நன்மை பெறவும், வெப்பத்தினால் ஏற்படும் நோய்களில் இருந்து மக்களை காக்க வேண்டிய, விளக்குகள் ஏற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, இரவு 8.00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.