பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :2498 days ago
பழநி : பழநிமுருகன் கோயிலில் ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் மூன்று மணிநேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கோடைவிடுமுறை காரணமாக பழநி முருகன் கோயிலுக்கு மதுரை, சிவகங்கை, திருப்பூர், கோவை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், காவடிகள், பால்குடங்கள் எடுத்து வருகின்றனர். நேற்று ஞாயிறு விடுமுறை நாளில் மலைக்கோயிலில் அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்தனர். மலைக்கோயில் பொது தரிசனம் வழியில் 3 மணி நேரம் வரை காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். இதேப்போல தங்கரத புறப்பாட்டை காண பக்தர்கள் திரண்டனர்.