மானாமதுரை மண் மட்டுமல்ல... ‘நிலாச்சோறும்’ மணக்கும்
ADDED :2410 days ago
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக வைகை ஆற்றுக்குள் அமர்ந்து அனைத்து மதத்தினரும் நிலாச் சோறு சாப்பிட்டனர். வைகை கரையோரம் நடக்கும் சித்திரை திருவிழாக்களில் மானாமதுரை தனிச்சிறப்பு வாய்ந்தது.
ஆற்றில் அழகர் இறங்கும் விழாவிற்கு அடுத்த நாள் நிலாச்சோறு சாப்பிடுவர். நேற்று முன்தினம் இரவு வைகை ஆற்றுக்குள் பவுர்ணமி நிலவு ஒளியில் மானாமதுரை, சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த அனைத்து மதத்தினரும் வீட்டில் சமைத்த உணவு வகைகளை கொண்டு வந்து உறவினர்களோடு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.