சோழவந்தானில் பூப்பல்லக்கு உற்ஸவம்
ADDED :2397 days ago
சோழவந்தான் : சோழவந்தானில் சித்திரை திருவிழா பூப்பல்லக்கு உற்ஸவத்துடன் நிறைவடைந்தது. ஏப்.,19ல் ஜெனகை நாராயணப் பெருமாள், அழகர் கோலத்தில் வெண்குதிரையில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். ஏப்.,20ல் இரட்டை அக்ரஹாரம் கிருஷ்ணன் கோயில் முன் யாதவர் சங்கம் சார்பில் தசாவதாரம் நடந்தது. நேற்றுமுன்தினம் இரவு சுவாமி பூப்பல்லக்கில் எழுந்தருளினார்.