உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபாண்டி சங்கடஹர சதுர்த்தி: விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை

வீரபாண்டி சங்கடஹர சதுர்த்தி: விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை

வீரபாண்டி: சேலம் அருகே, அரியானூர் பிரிவில் உள்ள மகாகணபதி கோவிலில், சங்கடஹர சதுர்த்தியான நேற்று (ஏப்., 22ல்) காலை மூலவர் கணபதிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளிகவசம் அணிவிக்கப்பட்டது. மாலையில் நடந்த சதுர்த்தி பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இளம்பிள்ளை, பிரதான சாலையில் உள்ள பெத்தாம்பட்டி மகாகணபதி கோவில், ஆட்டையாம்பட்டி கைலாசம்பாளையம் புதூரில் உள்ள ராஜகணபதி கோவில்களில், மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !