உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முனீஸ்வரன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

முனீஸ்வரன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

 புதுச்சேரி: ஒட்டம்பாளையத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த முனீஸ்வரன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.


முதலியார்பேட்டை அடுத்த ஒட்டம்பாளையத்தில் அமைந்துள்ள முனீஸ்வரன் கோவிலில் நேற்று முன்தினம் மாலை 4.00 மணிக்கு விக்னேஸ்வர  பூஜை, நேற்று காலை 8.30 மணிக்கு கணபதி ேஹாமம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 10.30 மணிக்கு முனீஸ்வரன், விநாயகர், அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின் மாலை 5.30 மணிக்கு, சுவாமி வீதியுலா  நடைபெற்றது.ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகக்குழு தலைவர்கள் வடிவேலு, சுரேஷ், பெருமாள், ராஜ், பழனி, முருகன் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !