வில்லியனுார்:வில்லியனுார் துாய லுார்து அன்னை ஆலய ஆண்டு பெருவிழா நேற்றுகொடியேற்றத்துடன் துவங்கியது.
வில்லியனுார் லுார்து அன்னை ஆலய 142வது ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டுநேற்றுகாலை 5:30 மணியளவில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து கொடியேற்றத்துடன் ஆண்டு பெருவிழா துவங்கியது.காலை 7:00 மணிக்கு உதகை மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் திருப்பலியும், ரெயின்போ நகர் பங்கு தந்தை தோமினிக் ரொசாரியோ தலைமையில் காலை 11:30 மணிக்கு திருப்பலியும், வினோபா நகர் பங்குதந்தை சின்னப்பன் தலைமையில் மாலை 6:00 மணிக்கு திருப்பலியும், புதுச்சேரி-கடலுார் மறைமாவட்ட முதன்மைகுரு அருளானந்தம் தலைமையில் இரவு 7:30 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது.தொடர்ந்து நடந்து வரும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் காலையில் சிறப்பு திருப்பலியும், இரவு அலங்கரிக்கப்பட்ட தேர்பவனியும் நடைபெறுகிறது. முக்கிய விழாவாக வரும் 4ம் தேதி மாதத்தின் முதல் சனி திருப்பலியும், புதிய ஆலயத்தில் கோவை மாதாவின் மணிகள் நடத்தும் செபமாலை கண்காட்சி நடைபெறுகிறது.வரும் 5 ம் தேதி திருத்தலப் பெருவிழாவில் காலை 5:30 மணிக்கு விருத்தாசலம் முத்துச்சித்தர் அமைதியகம் பங்குதந்தை பிச்சைமுத்து தலைமையில் சிறப்பு திருப்பலியும், காலை 7:30 மணிக்கு புதுச்சேரி--கடலுார் பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் கூட்டுத் திருப்பலியும், அன்றிரவு 7:30 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. 6ம் தேதி காலை 6:30 மணிக்கு நடக்கும் திருப்பலிக்கு பின் கொடியிறக்கத்துடன் ஆண்டுத் திருவிழா நிறைவடைகிறது.விழா ஏற்பாடுகளை, வில்லியனுார் ஆலய பாதிரியார்கள் பிச்சைமுத்து, ஜோசப் சகாயராஜ் மற்றும் வின்சென்ட் அமல்ராஜ் தலைமையில் விழாக்குழுவினர், பங்கு பேரவையினர் மற்றும் பக்தர்கள் செய்துவருகின்றனர்.