உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கரபாண்டியபுரத்தில் சித்திரை பூக்குழி விழா

சங்கரபாண்டியபுரத்தில் சித்திரை பூக்குழி விழா

 சத்திரப்பட்டி : சத்திரப்பட்டி அருகே சங்கரபாண்டியபுரம் பூமாரியம்மன் கோயிலில் சித்திரை பூக்குழி திருவிழா கடந்த 19 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்களாக நடந்து வருகிறது. தினமும் அம்மனுக்கு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன. கடந்த 28 ம்  தேதி பொங்கல் விழா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் பூமாரியம்மன் அலங்கார கண்ணாடி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அக்னி சட்டியுடன் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. பின்னர் பக்தர்கள் பூக்குழி இறங்கி வேண்டுதலை  நிறைவேற்றினர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !