உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு குறித்து ஆய்வு

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு குறித்து ஆய்வு

பவானி: சங்கமேஸ்வரர் கோவிலில், பாதுகாப்பு குறித்த ஆய்வு நடந்தது. இலங்கையில் சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்பில், ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து தமிழக கோவில்களில் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடு குறித்து, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் ஈரோடு மாவட்டத்தில், முதன் முதலாக, பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், நேற்று (மே., 3ல்) ஆய்வு நடந்தது.

சென்னை வி.ஐ.பி., பாதுகாப்பு இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில், பவானி டி.எஸ்.பி., சார்லஸ், ஈரோடு மாவட்ட மதுவிலக்கு துணை காவல் கண்காணிப்பாளர் வெற்றிவேந்தன், வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழக்க செய்யும் பாதுகாப்பு குழுவினர், உளவுத் துறை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும், ஆய்வில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !