உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு மகிமாலீஸ்வரர் கோவிலில் நாயன்மார் வீதியுலா: சப்பரத்தில் சுமந்த பெண்கள்

ஈரோடு மகிமாலீஸ்வரர் கோவிலில் நாயன்மார் வீதியுலா: சப்பரத்தில் சுமந்த பெண்கள்

ஈரோடு: மகிமாலீஸ்வரர் கோவில், சித்திரை திருவிழாவில், நாயன்மார் திருவீதியுலா நடந்தது. ஈரோடு, டி.வி.எஸ்., வீதியில் உள்ள, மகிமாலீஸ்வரர் கோவிலில், சித்திரை சதயத்திருவிழா, கடந்த, 21ல் தொடங்கியது. கடந்த, 29ல் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்தது. நாயன்மார்கள் திருவீதி உலா நேற்றிரவு நடந்தது. கோவில் வளாகத்தில் இருந்து, அலங்கரிப்பட்ட சப்பரத்தில், 63 நாயன்மார்களை பெண்களே சுமந்து சென்றனர். ரிஷப வாகனத்தில் மங்காளம்பிகை உடனமர் மகிமாலீஸ்வரர் முன்னே வர, ஊர்வலம், பி.எஸ்.பார்க், கனி மார்க்கெட் சாலை, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ். வீதி வழியாக கோவிலில் நிறைவடைந்தது. வழிநெடுகிலும் காத்திருந்த பக்தர்கள் நமசிவாய மந்திரந்தை உச்சரித்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !