உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி மகா மாரியம்மன் கோவிலில் வரும் 8ல் கும்பாபிஷேகம்

பொள்ளாச்சி மகா மாரியம்மன் கோவிலில் வரும் 8ல் கும்பாபிஷேகம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, செட்டியக்காபாளையம் விநாயகர், பாலமுருகன், மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வரும், 8ம் தேதி நடக்கிறது.

பொள்ளாச்சி அருகே செட்டியக்காபாளையம் பகுதியில், பழமை வாய்ந்த விநாயகர், பால முருகன், மகா மாரியம்மன் கோவிலில், அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா வரும், 6ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. அன்று இரவு, 8:00 மணிக்கு லட்சுமி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனையும் நடக்கிறது.வரும், 7ம் தேதி மாலை, 4:30 மணிக்கு விநாயகர் வழிபாடு, காப்பு கட்டுதல், முதற்கால யாக பூஜையும்; மாலை, 6:00 மணிக்கு கோபுர கலசம் வைத்தல், இரவு, 7:30 மணிக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

வரும், 8ம் தேதி காலை, 7:15 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, காலை, 9:15 மணிக்கு கடம் புறப்பாடு, காலை, 9:30 மணிக்கு கோபுர விமான கும்பாபிஷேகம், காலை, 9:45 மணிக்கு, விநாயகர், பாலமுருகன், மகா மாரியம்மன் மூலஸ்தான கும்பாபிஷேகம், தசதானம், தச தரிசனம், மகா அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து, அன்னதானம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !