தேவகோட்டையில் மழை வேண்டி சிறப்பு ஹோமம்
ADDED :2396 days ago
தேவகோட்டை:தேவகோட்டையில் கடும் வறட்சி ஏற்பட்டு நிலத்தடி வெகுவாக குறைந்துள்ளது. வெயிலும் மக்களை வாட்டி வதைக்கிறது. அறநிலையத்துறை அறிவித்தபடி தேவகோட்டை சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவிலில் ராமலிங்க குருக்கள் தலைமையில் சிறப்பு ஹோமம் நடந்தது.
அதனை தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தன. செயல் அலுவலர், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.