உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூரில் திருவாசக முற்றோதல்

திருக்கோவிலூரில் திருவாசக முற்றோதல்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில், சிவானந்தவல்லி சன்னதியில் திருவாதிரை, திருவாசக முற்றோதல் நடந்தது.திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், சிவனடியார் குழுவின் சார்பில், திருவாதிரை நட்சத்திர திருநாளான நேற்று (மே., 9ல்), சிவானந்தவல்லி சன்னதியில் திருவாசகம் முற்றோதல் நடந்தது.

காலை 9:00 மணி முதல், பிற்பகல் 2:30 மணி வரை இடைவிடாது நடந்த முற்றோதலில் ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை முற்றோதல் குழு செயலர்
சிவகுருநாதன், அம்பலவாணன் உள்ளிட்ட சிவனடியார்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !