நாமக்கலில் மழை வேண்டி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம்
நாமக்கல்: மழை வேண்டி, நாமக்கல் நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கடந்தாண்டு போதிய மழையில்லாததால், நடப்பாண்டு பிப்ரவரி இறுதியிலேயே வெயிலின் தாக்கம்
அதிகரித்துள்ளது. இதனால் நீர் இருந்த ஏரி, குளம், குட்டைகள் வறண்டு போயின. கிணறுகளில் நீர் இல்லாததால், விவசாயமும் பாதிப்படைந்தது. கிராமப்புறங்களில், மழை வேண்டி வினோத வழிபாடுகளை செய்து, சுவாமி வழிபாட்டில் மக்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் மழை வேண்டி வருண யாகம், சிறப்பு அபிஷேகம்ம் உள்ளிட்டவை நடத்த
அதிகாரிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து, சேலம் மண்டலத்திற்குட்பட்ட, 47 கோவில்களில் வருண யாகம் நடத்தப்படுகிறது. கடந்த, 2ல் தொடங்கிய இந்த யாகமானது,
ஒவ்வொரு கோவிலாக நடத்தப்பட்டு, 25ல் நிறைவு பெறுகிறது. நாமக்கல் நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. முன்னதாக, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் அருள்பாலிக்கும் நரசிம்ம சுவாமிக்கு பால், இளநீர், தயிர், மஞ்சள், குங்குமம், திரவியம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜை செய்தனர். இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.