நல்லம்பள்ளி அம்மனுக்கு புடவை படைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த லளிகம், பதிஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று (மே., 9ல்), புடவை படைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், நேற்று முன்தினம் (மே., 8ல்) காலை, 8:00 மணிக்கு பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலை,
6:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்ன. நேற்று காலை, 7:00 மணிக்கு, அம்மனுக்கு, பால், தயிர், சந்தனம், குங்குமம், இளநீர், தேன் உள்ளிட்ட
பல்வேறு திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். காலை, 11:00 மணிக்கு, புடவை படைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள், தங்களது நேர்த்திக்கடனாக, பல்வேறு வகையான புடவைகளை கொண்டு வந்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டு சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, விழாக் குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.