காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் உண்டியலில் ரூ.2.77 லட்சம் வசூல்
ADDED :2333 days ago
காஞ்சிபுரம்: கச்சபேஸ்வரர் கோவில் உண்டியலில், 2.77 லட்சம் ரூபாய், காணிக்கை கிடைத்தது. காஞ்சிபுரத்தில், சிறப்பு பெற்று விளங்கும் கச்சபேஸ்வரர் கோவில் உண்டியல், நேற்று (மே., 19ல்) காலை, வழிபாட்டு நேரத்தில் திறக்கப்பட்டது.அறநிலையத் துறை உதவி ஆணையர், ரமணி மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.இதில், 2.77 லட்சம் ரூபாய், 14 கிராம் தங்கம், 150 கிராம் வெள்ளி கிடைத்தது.