திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில், வசந்த விழா துவக்கம்
ADDED :2333 days ago
திருவொற்றியூர் : தியாகராஜ சுவாமி கோவிலில், வசந்த உற்சவ விழா, காப்பு கட்டுதலுடன் துவங்கியது.திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, ஆண்டுதோறும், சித்திரை - வைகாசி மாதங்களில், வசந்த காலத்தை குறிக்கும் வகையில், வசந்த உற்சவம் நடக்கும்.நேற்று முன்தினம் (மே., 19ல்) இரவு, சிறப்பு அபிஷேகம், காப்புக்கட்டுதலுடன், இவ்வாண்டு, வசந்த உற்சவ விழா துவங்கியது.
மொத்தம், 15 நாட்கள் நடைபெறும் விழாவில், முதல் மூன்று நாட்கள், சன்னிதியில் வீற்றிருக் கும் தியாகராஜருக்கு, சிறப்பு அபிஷேகம் நடக்கும். புதன் மற்றும் சனிக்கிழமையில், உற்சவர், மாடவீதி உலா வருவார். மற்ற நாட்களில், கோவில் வளாகத்தில் உள்ள, வசந்த தீர்த்த குளத்தை சுற்றி, திருநடனம் புரிவார்.