மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
2320 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
2320 days ago
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே திருக்கோஷ்டியூர் வைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் பைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் மூலபால கால பைரவர் எழுந்தருளியுள்ளார். பைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. நேற்று முன் தினம் பைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் இரவு 7:00 மணி அளவில் மகா கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து கோ பூஜை,கஜபூஜை, லட்சார்ச்சனை நடந்தது. பின்னர் வஸ்திரயாகம், புஷ்ப யாகம் முடிந்து யாகசாலை பூர்ணாகுதி நடந்தது. சிவச்சார்யர்களால் யாகசாலையிருந்து புனித நீர் நிரம்பிய கலச புறப்பாடு துவங்கியது. கோயில் பிரகார வலம் வந்து பைரவர் சன்னதிக்கு வந்து பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பெண்கள் தீபம் ஏற்றி நள்ளிரவு வரை பைரவரை வழிபட்டனர்.
2320 days ago
2320 days ago