/
கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பறவை அலகு குத்தி நேர்த்திக்கடன்
கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பறவை அலகு குத்தி நேர்த்திக்கடன்
ADDED :2660 days ago
கிருஷ்ணராயபுரம்: மேட்டு மகாதானபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, பக்தர்கள் பறவை அலகு குத்தி வந்தனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த மேட்டு மகாதானபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த வாரத்தில் இருந்து நடக்கிறது. நேற்றுமுன்தினம் (மே., 28ல்) தேரோட்டம் நடந்தது. நேற்று (மே., 29ல்)காலை, மகாதானபுரம் காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் அக்னிச் சட்டி எடுத்து, கன்ன அலகு, பறவை அலகு குத்தி ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.