திருத்தணி ரம்ஜான் பண்டிகை: இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
திருத்தணி : ரம்ஜான் பண்டிகையையொட்டி, திரளான இஸ்லாமியர்கள் குழந்தைகளுடன் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை நடத்தினர்.திருத்தணி ஒன்றியம், சத்திரஞ்ஜெயபுரம்
ஊராட்சிக்குட்பட்ட முஸ்லிம் நகரில், ரம்ஜான் பண்டிகையையொட்டி, நேற்று (ஜூன்., 5ல்) காலை, அங்குள்ள மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்தினர்.
இதில், மூன்று வயது குழந்தைகள் முதல், முதியவர்கள் வரை,, அனைவரும் புத்தாடை அணிந்து, சிறப்பு தொழுகை நடத்தினர். தொடர்ந்து, ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
அதே போல், திருத்தணி நகராட்சி, காந்தி மெயின் சாலையில், மக்கா பள்ளி வாசல், ம.பொ.சி.சாலையில் உள்ள ஜூம்மா மசூதி. திருத்தணி ஒன்றியம் இஸ்லாம் நகரில் உட்பட
திருத்தணி, ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய தாலுகாவில் உள்ள அனைத்து மசூதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.