திருப்போரூரில் மரம் ஏறிய அர்ச்சுனன் தபசு
ADDED :2346 days ago
திருப்போரூர்: திரவுபதி அம்மன் கோயிலில், அர்ச்சுனன், தபசு மரம் ஏறுதல் நேற்று (ஜூன்., 5ல்) நடந்தது.
திருப்போரூர் திரவுபதி அம்மன் கோயிலின், 97 ஆண்டு, அக்னி வசந்த விழா, மே., 30ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும், மகாபாரத சொற்பொழிவும், நாடகமும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான, அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி, கோயில் வளாகத்தில், நேற்று (ஜூன்., 5ல்) நடந்தது.
மரத்தில் இருந்த அர்ச்சுனன், வில்வ இலைகளையும், எலுமிச்சை பழங்களையும், மஞ்சள், குங்குமம், தாலி சரடையும், பக்தர்களை நோக்கி வீசினார்.சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த, ஏராளமானோர் பங்கேற்றனர்.