உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கட்டிக்குளம் சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமி கோயிலில் ராஜகோபுரத் திருப்பணி ஆரம்பம்

கட்டிக்குளம் சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமி கோயிலில் ராஜகோபுரத் திருப்பணி ஆரம்பம்

கட்டிக்குளம் : கட்டிக்குளம் சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமிகள் மகாசித்தர். இவர் தென்பொதிகையில் தவமிருந்து அகத்திய மாமுனிவரின் அருளாசி பெற்று, திருத்தலங்களைத் தரிசித்துக் கொண்டு வடதிசை நோக்கி வரும் வழியில், மகாசித்தர்கள் தவமிருந்து அருள் பெற்றதால் இயற்கைப் பொலிவும், தவவலிமையும், அருள்நெறியும் நிறைந்துள்ள அழகிய கட்டிக்குளம் சுவாமிகளைத் தன்பால் ஈர்த்தது.

சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமிகள் கட்டிக்குளம் வந்தபோது இளைஞராகக் காட்சி தந்தார். சுவாமிகள் கட்டிக்குளத்தில், தங்கினார். தவமிருந்தார், சித்துக்கள் புரிந்தார். சிவமயமாய்த் திகழ்ந்தார். இளைஞருடன் இளைஞராய்க் கிட்டி விளையாடி ஆனந்தம் தந்தார். பசிப்பிணி போக்கினார். சங்கடங்களைத் தீர்த்தார். நோய்ப்பிணி அகற்றினார். வறுமையை நீக்கினார். நீதி, நெறி முறைகளைப்புகுத்தி மக்களை நல்வழிப்படுத்தினார்.

சூட்டுக்கோல் மகிமை: மனதில் பேராசை, பொறாமை கொண்டு தன்னை நாடி வருபவர்களுக்கு சுவாமிகள் சூட்டுக்கோல் சூடு வைப்பார். பேராசையும், பொறாமையும், தீய எண்ணங்களும், சஞ்சலம், சலனம் முதலானவைகளும் தீரும். நல்ல எண்ணத்துடன் வருபவருக்கு இந்தக் கோலால் சுவாமிகள் ஆசீர்வாதம் வழங்குவார்.

கட்டிக்குளம் சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமிகள் திருக்கோயில்: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகா. முத்தனேந்தல் பிர்க்கா. கட்டிக்குளம் கிராமத்தில் சுவாமிகள் முதல் ஜீவ ஒடுக்கம் பெற்ற இடத்தில் மிகப் பிரமாண்டமான கோயிலை நமது முன்னோர்கள் எழுப்பியுள்ளார்கள். ஆராய்ச்சியாளர்களும் அறிஞர் பெருமக்களும் இந்த கோயில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்கட்டப்பட்ட கோயில் என ஆய்ந்திருக்கிறார்கள்.

கோயில் இராஜகோபுரத் திருப்பணி: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகா, கட்டிக்குளம் கிராமத்தில் அருள்மிகு சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமிகள் கோயிலிற்கு இராஜகோபுரம் அமைக்க வேண்டுமென்றும், கோயிலின் முன்பாகத் திருக்குளம் அமைக்க வேண்டுமென்றும், தெய்வீக சிந்தனையுடையவர்கள் மற்றும் மகான்களது விருப்பம். அதை நிறைவேற்ற அதற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள திருப்பணிக்குழு தீர்மானித்துள்ளது. 71 அடி உயரத்தில் இராஜகோபுரம் அமைத்தல், கற்பககிரஹக் கோபுரத்தை பாலாலயம் செய்து 21 அடி உயரத்தில் அமைத்தல், கோயிலைப் புனரமைத்து புதுப்பொலிவுடன் உருவாக்கவும், கோயிலின் முன்பாக திருக்குளம் அமைக்கவும் இதற்கான திருப்பணிகள் 20.04.2018ம் தேதி கட்டிக்குளம் சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமிகள், மாயாண்டி சுவாமிகள் ஆசியுடன் கட்டிக்குளம் கிராம பொதுமக்கள் முன்னிலையில் பூமி பூஜை துவங்கப்பட்டு, சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் திருப்பணி செய்து, மகா கும்பாபிஷேகம் நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.  திருப்பணியில் பங்கு கொள்ள விரும்பும் அன்பர்கள் திருப்பணிக்கான பொருட்களோ அல்லது பணமோ வழங்கி சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமிகளின் பேரருளுக்குப் பாத்திரராகும்படி திருப்பணிக்குழு கேட்டு கொள்கிறது.

நன்கொடை வழங்குவது அல்லது குறிப்பிட்ட செலவினத்தை ஏற்றுக்கொள்வது போன்றவைகளுக்கு கீழ்க்கண்ட முகவரி மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

மேலாளர் - கட்டிக்குளம் சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமிகள்
திருக்கோயில் திருப்பணி

C/o. மாரியப்பா டவர், பிளாட் எண்: 13ஏ, எல்லீஸ் நகர்,
யமுனா வீதி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (HIG)
மதுரை -625016. தொலைபேசி எண்: 8220053905

வங்கிக் கணக்கில் நேரடியாகவோ, இணையத்தின் மூலமாகவோ நன்கொடை செலுத்த விரும்புபவர்களுக்கான வாங்கி கணக்கு விபரம்

A/c. Name: M/s. Kattikulam Soottukole Ramalinga Swamigal
Temple Rajagopuram
Bank & Branch: State Bank of India, Arasaradi (Madurai)
Current A/c. No.: 37673666073
IFSC code: SBIN0007482


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !