உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி கோயிலின் ரூ.200 கோடி நிலம் மீட்க நடவடிக்கை

மதுரை மீனாட்சி கோயிலின் ரூ.200 கோடி நிலம் மீட்க நடவடிக்கை

மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்திற்கு பட்டா பெற்றவரிடம் இருந்து மீட்டுத்தரும்படி கோயில் நிர்வாகம் கலெக்டரிடம் மனு அளித்தது.

மதுரை பொன்மேனியில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 200 கோடி ரூபாய் மதிப்புள்ள 14 ஏக்கர் நிலம் உள்ளது. இதை குத்தகை அடிப்படையில் தனியார் சிலர்
பராமரித்து வருகின்றனர். அந்நிலத்திற்கு யோகேஸ்வரன் என்பவர் தனது பெயருக்கு பட்டா பெற முயன்றார். இதற்காக மாவட்ட வருவாய் அலுவலரிடம் முன்பு மனு செய்தார். விசாரணையில் பட்டா கோரும் நிலம் கோயிலுக்கு சொந்தமானது, எனக்கூறி பட்டா மாறுதல் மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் தள்ளுபடி செய்தார்.மேற்கு தாசில்தாராக
பணியாற்றிய செல்வராஜிடம் பட்டா மாறுதல் கேட்டு யோகேஸ்வரன் மனு தாக்கல் செய்தார்.
முறையாக விசாரிக்காமல் யோகேஸ்வரன் பெயருக்கு பட்டா மாறுதல் செய்து தாசில்தார் உத்தரவிட்டார். பட்டா மாறுதல் குறித்து கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டது. கோயில்
நிர்வாகம் சார்பில் கலெக்டர் சாந்தகுமாரிடம் (பொறுப்பு) நேற்று (ஜூன்., 6ல்)புகார் அளிக்கப்பட்டது. அதில் போலி ஆவணம் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தள்ளுபடி செய்த விவரத்தை மறைத்து யோகேஸ்வரன் கோயில் நிலத்தை தனது பெயருக்கு பட்டா பெற்று மோசடி செய்துஉள்ளார். நிலத்தை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என குறிப்பிடப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !