செஞ்சி செல்வ விநாயகர் கோவிலில் 14ம் தேதி மகா கும்பாபிஷகம்
செஞ்சி : ஒதியத்தூர் செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது.
செஞ்சி அடுத்த ஒதியத்தூரில் உள்ள செல்வ விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ர மணியர், இடும்பன், கடம்பன், நவக்கிரகங்கள் மற்றும் அருணகிரி நாதர் கோவில் திருப் பணிகள் முடிந்து வரும் 14ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகத்தையொட்டி, நாளை 12ம் தேதி இரவு 8:30 மணிக்கு தேவதா அனுக்ஞை, கணபதி பூஜை, பிரவேச பலி நடக்கிறது. 13ம் தேதி காலை 9:00 மணிக்கு கணபதி பூஜை, கோ பூஜையும்; மாலை 5.30 மணிக்கு கலச பிரதிஷ்டை, யாகசாலை பிரவேசம், முதல் கால யாக சாலை பூஜை நடக்கிறது.
கும்பாபிஷேக தினமான 14ம் தேதி காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும்; தொடர்ந்து கலச புறப்பாடும், 9:30 மணிக்கு கருவறை விமானம் மகா கும்பாபிஷகமும், 10:00 மணிக்கு மூலவர் மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.