உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் ஏகாம்பரர் கோவிலில், சன்னிதிகள் திறப்பு

காஞ்சிபுரம் ஏகாம்பரர் கோவிலில், சன்னிதிகள் திறப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரர் கோவிலில், பூட்டப்பட்டிருந்த நான்கு சன்னிதிகளும் திறக்கப்பட்டு, ஆகம விதிப்படி பூஜை நடத்த, ஹிந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், வழிபாட்டு நேரத்தில், ஆறுமுகசுவாமி, மாவடி கந்தர், மயானீஸ்வரர், வாலீஸ்வரர் சன்னிதிகள் பூட்டப்பட்டிருந்தன.இவற்றை திறந்து, வழக்கம்போல பூஜைகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து, நம் நாளிதழிலும் செய்தி வெளியிடப்பட்டது.இதன் எதிரொலியாக, நான்கு சன்னிதிகளையும் திறந்து, ஆகம விதிப்படி பூஜைகள் நடத்த, ஹிந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !