சித்திரை அப்பன் தெருவிலே இந்த வாசகத்தின் பொருளும் விளக்கமும் தருக?
இந்த சுலவடை எப்படிப் பழக்கத்திற்கு வந்தது என்றே புரியவில்லை. சித்திரையில் குழந்தைப் பெற்றவர்களெல்லாம் நடுத்தெருவில் தான் நிற்கவில்லை. ஒரு சில பாடல்களில் வரும் ஒரு வரியை எடுத்துக் கொண்டு இது போல தவறாக செய்து விடுகிறார்கள். அந்த வரிக்கு அடுத்ததாக உள்ள வரி என்னவென்று தெரிந்தால் தான் நமக்கு முழுமையான அர்த்தம் தெரியும். உதாரணமாக இடத்தை கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவான் என்று ஒரு பழமொழி சொல்கிறார்கள். கொஞ்சம் உதவி செய்தால், நம்மிடமிருந்து எல்லாவற்றையும் பிடுங்குபவர்களைச் சொல்லும் வார்த்தையாக இது கையாளப்படுகிறது. ஆனால், வாரியார் சுவாமிகள் இதற்கு அழகாக பொருள் சொல்வார்கள் நம் உள்ளத்தில் இறைவனுக்கு இடம் கொடுத்தால் நம்மிடம் உள்ள மடத்தை அதாவது அறியாமையைப் போக்குவார், என்று. இதுபோன்று எவ்வளவோ சுலவடைகள், பழமொழிகள் தவறான பொருள் கொண்டு மக்களைக் குழப்பி வருகின்றன.