உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பயணம் இனிதாக அமைய... பரிகாரம்

பயணம் இனிதாக அமைய... பரிகாரம்

வாகனங்களில் பயணம் செல்வது இன்றைய வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று. அதே நேரம் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. வெளியில் சென்று விட்டு பத்திரமாக வீடு திரும்பவும், பயணம் இனிதாக அமையவும் செய்ய வேண்டிய பரிகாரம் இது.

கிளம்பும் போது, ’ஹரிஓம்’ என்னும் மந்திரத்தை 12 முறை ஜபியுங்கள். இது கவசம் போல் உங்களைப் பாதுகாக்கும். முருகப்பெருமான் மீது அருணகிரிநாதர் பாடிய கந்தர் அனுபூதியில் உள்ள,

’உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒலியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே’

என்னும் பாடலை பாராயணம் செய்து விட்டும் கிளம்பலாம். பயணம் செல்லும் இடமெல்லாம் முருகப்பெருமான் கூடவே இருந்து உங்களைக் காத்தருள்வார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !