மழைவேண்டி கூட்டுப்பிரார்த்தனை
ADDED :2309 days ago
மதுரை: தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்ப்ராஸ்) சார்பில், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் மைதானத்தில் மழை வேண்டி கூட்டுப்பிரார்த்தனை நடந்தது.
மாவட்ட தலைவர் கிருஷ்ணசுவாமி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ரவி வரவேற்றார்.ஸ்ரீகாயத்ரி வருண மந்திரம், திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல், விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் இடம் பெற்றது. சின்மயா மிஷன் சிவயோகானந்தா, கடம்பவனம் ரிசார்ட்ஸ் மேலாண்மை இயக்குனர் சித்ரா கணபதி, சேதுபதி மேல்நிலை பள்ளி தாளாளர் பார்த்தசாரதி, மூத்தவழக்கறிஞர் கிருஷ்ணவேணி, வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், கூடலழகர் பக்த சபை நிர்வாகி ராதாகிருஷ்ணன், கிருஷ்ணய்யர் பங்கேற்றனர். மாநில செயலாளர் ஸ்ரீராமன் நன்றி கூறினார்.