உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணராயபுரம் மாரியம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம்

கிருஷ்ணராயபுரம் மாரியம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம்

கிருஷ்ணராயபுரம்: வல்லம் மாரியம்மன் கோவிலில், சிறப்பு யாகம் மற்றும் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து, சிறப்பு வழிபாடு நடந்தது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த வல்லம் கிராமத்தில், மாரியம்மன் கோவில் உள்ளது. இதில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்வதற்காக, நேற்று முன்தினம் (ஜூன்., 29ல்) மாலை, லாலாப் பேட்டை காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தனர். நேற்று (ஜூன்., 29ல்) காலை, கோவில் வளாகத்தில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. பின்னர் மாரியம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !