உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளித்தலை சிவன்கோவில்களில் பிரதோஷ வழிபாடு

குளித்தலை சிவன்கோவில்களில் பிரதோஷ வழிபாடு

குளித்தலை: பிரதோஷத்தையொட்டி, குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில், சிறப்பு வழிபாடு நடந்தது. குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் நேற்று (ஜூன்., 30ல்)மாலை, நந்தீஸ்வரருக்கு மஞ்சள், சந்தனம், தேன் முதலான வாசனாதி திரவியங்கள் மூலம், சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மேட்டுமருதூர் ஆரா அமுதீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர். அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர்,
பெரியபாலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், முத்துபூபாலசமுத்திரம் சிவன் கோவிலில்
நந்தீஸ்வரருக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !