அருப்புக்கோட்டை அருகே மஞ்சக்கம்மாள் கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :2291 days ago
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே சுக்கிலநத்தம் ஸ்ரீ மஞ்சக்கம்மாள் கோயிலில் வருஷாபிசேக விழா நடந்தது. காலையில் கணபதி பூஜை, பகவத் அனுக்ஞை, எஜமான சங்கல் பம், வருண பூஜை, புண்யாக வசனம், கலச பூஜை, அம்மன் ஹோமம், நாகம்மாள் மற்றும் கருப்பணசாமிக்கும் ஹோமம், அம்மனுக்கு விசேஷ அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடந்தது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.