/
கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் பங்குனித் திருவிழா: மார்ச் 27ல் கொடியேற்றத்துடன் துவக்கம்!
திருப்பரங்குன்றம் பங்குனித் திருவிழா: மார்ச் 27ல் கொடியேற்றத்துடன் துவக்கம்!
ADDED :4966 days ago
திருப்பரங்குன்றம் :திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி திருவிழா மார்ச் 27ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழா முன் நிகழ்ச்சியாக நேற்று தேங்காய் தொடும் முகூர்த்தம் நடந்தது. பேஷ்கார் தனசேகரன், துணைகமிஷனர் செந்தில் வேலன், சிவாச்சாரியார் சுவாமிநாதன் பங்கேற்றனர். தேர் முகூர்த்தம்: கருப்பண சுவாமி சன்னதியில் உளி, சுத்தியல் வைத்து பூஜைகள் முடிந்து, கோயில் முன் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் தேரில் விநாயகர், தராசு முருகனுக்கு அபிஷேகத்துடன் தேர் முகூர்த்தம் நடந்தது. நாளை தேர் சுத்தம் செய்யும் பணி துவங்கும். ஐந்தாம் திருவிழாவையொட்டி ஏப் 1ல், வெள்ளிக் குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி கைபாரம் நிகழ்ச்சியும், ஏப். 7ல் பட்டாபிஷேகம், ஏப்.8ல் திருக்கல்யாணம், ஏப்.9ல் தேரோட்டம், ஏப்.10ல் தீர்த்த உற்சவம் நடக்கிறது.