உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரிய மாரியம்மன் கோயிலில் இன்று பூக்குழி திருவிழா

பெரிய மாரியம்மன் கோயிலில் இன்று பூக்குழி திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூர் :ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில், இன்று நடக்கும் பூக்குழி விழாவில்,லசூ பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா, கடந்த 10ம் தேதி கொடியேற்றுதலுடன் துவங்கியது. விழாவில் தினம் அம்பாள் காமதேனு, அன்னம், குதிரை, சிம்மம், சேஷ வாகனம் உட்பட பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான இன்று அதிகாலை தீ வளர்த்தல், தீ அள்ளுதல் நடக்கிறது. காலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், மதியம் 1.25 மணிக்கு பூக்குழி இறங்குதல் நடக்கிறது. இதற்காக சங்கரன்கோவில், விருதுநகர், மதுரை உட்பட சுற்று வட்டார கிராமங்களிலிருந்து, பத்தாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள், நேற்று இரவு முதல் ஸ்ரீவி.,க்கு வந்துள்ளனர். விழாவின் கடைசி நாளான நாளை(மார்ச் 23 ) பகல் 12 மணிக்கு தேரோட்டம், மாலை 5 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் குருநாதன், செயல் அலுவலர் சரவணன் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !