பட்டத்தரசியம்மன் கோவிலில் யுகாதி திருவிழா!
ADDED :4970 days ago
உடுமலை : பூளவாடி பட்டத்தரசியம்மன் கோவிலில் பங்குனி யுகாதி திருவிழா இன்று துவங்குகிறது. உடுமலை அருகே பூளவாடியில் பிரசித்தி பெற்ற பட்டத்தரசியம்மன் கோவில் உள்ளது. இங்கு தெலுங்கு ஆண்டு பிறப்பையொட்டி பங்குனி யுகாதி திருவிழா இரண்டு நாட்கள் நடக்கிறது. இன்று(22ம் தேதி) மாலை 4.00 மணிக்கு பூளவாடி அங்காளம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்குகிறது. இரவு 7.00 மணிககு மகா கணபதி யாகமும், நாளை காலை 7.00 மணிக்கு மாவிளக்கு பூஜையும், மதியம் 12.00 மணிக்கு அலங்கார பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு, 24 மனை தெலுங்கு செட்டியார் அறக்கட்டளை மற்றும் 24 மனை தெலுங்கு செட்டியார் சங்கத்தினர் செய்து வருகின்றனர்.