கடையம் கோயிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :5028 days ago
ஆழ்வார்குறிச்சி:கடையம் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.கடையம் கைலாசநாதர் - பஞ்சகல்யாணி அம்பாள் கோயிலில் நடந்த பிரதோஷ விழாவில் சுவாமி, அம்பாள், நந்தி பகவான் உட்பட பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகளை சுப்பிரமணியபட்டர், குமார்பட்டர் நடத்தினர். பின்னர் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர். பெண்கள் பூக்களால் சிவன் உருவம் அமைத்திருந்தது அனைவரையும் கவர்ந்தது. விழாவில் சுற்று வட்டார பொதுமக்கள் கலந்து கொண்டனர்.மேலும் ஆழ்வார்குறிச்சி சிவந்தியப்பர்-சிவகாமியம்பாள், வன்னியப்பர் - சிவகாமியம்பாள், சிவசைலம் சிவசைலநாதர் - பரமகல்யாணி அம்பாள், ரவணசமுத்திரம் சொக்கலிங்கநாதர் - மீனாட்சியம்பாள் உட்பட சுற்று வட்டார சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.