உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) பதவி உயர்வு

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) பதவி உயர்வு

இந்த மாதம் குரு, ராகுவால் அபார ஆற்றல் பிறக்கும். பொருளாதார வளம் மேம்படும். சுபவிஷயம் பற்றிய பேச்சு நடக்கும். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். புதன் ஆக.2 வரை நன்மை தருவார். உங்கள் ஆற்றல் மேம்படும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். குறிப்பாக மாத முற்பகுதில் கையிருப்பு அதிகரிக்கும். எடுத்த செயலை கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் வசதி வாய்ப்பு பெருகும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். ஆக.2க்கு பிறகு குழப்பம் நிலவும். மனைவி வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். கணவன், மனைவிக்குள்  ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். ஜூலை 17,18,19 ஆக.14,15ல் சகோதரர்கள் ஆதரவுடன் செயல்படுவர். அவர்களால் பொன், பொருள் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.  ஜூலை 22,23,24 ல் உறவினர் வகையில் பிரச்னை வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அதே நேரம் ஆக.9,10ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் ஏற்படும்.

பணியாளர்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர்.  பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சக ஊழியர்கள்  உதவிகரமாக செயல்படுவர். தனியார் துறையில் வேலைபார்ப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை ஆக.2க்குள் கேட்டு பெறவும். அதன் பிறகு அலைச்சல் அதிகரிக்கும். யாருடைய உதவியையும் நாடாமல் தன் கையே தனக்கு உதவி என்ற எண்ணத்தில் உழைத்து முன்னேறுங்கள். இருப்பினும் குருவால் வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடையிருக்காது. ஆக.7,8ல் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம்.  

தொழில், வியாபார விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆக.2 வரை பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் தொல்லை மறையும். புதிய வியாபாரத்தில் அதிக முதலீடு செய்ய வேண்டாம். ஜூலை 29,30ல் எதிர்பாராத வகையில் பணவரவுக்கு வாய்ப்பிருக்கிறது.

கலைஞர்களுக்கு முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் ஜூலை 23க்கு பிறகு மறையும். ஆனால் அதன் பிறகு பெண்கள் வகையில் தொல்லைகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான வளர்ச்சி காண்பர். பொருளாதார நிலையில்  குறைவிருக்காது. செவ்வாயால் அலைச்சல் ஏற்படலாம். பெண்கள் வகையில் தொல்லை வரலாம். ஜூலை 27,28ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு புதன் சாதகமாக காணப்படுவதால் முன்னேற்றம் காண்பர். நல்ல நிறுவனத்தில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். ஆக.2க்கு பிறகு அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியரின் ஆலோசனையை ஏற்பது நன்மை தரும்.

விவசாயிகள் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல மகசூல் கிடைக்கப் பெறுவர். புதிய சொத்து வாங்கலாம். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆக.2 வரை நல்ல வருமானம் கிடைக்கும். அதன் பிறகு கடின உழைப்பு தேவைப்படும். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.

பெண்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.  வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். புதிய பதவியும் தேடி வரும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு அரசு வகையில் சலுகை கிடைக்கும். ஆக.2க்கு பிறகு  வெளியில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் வீண்மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். ஜூலை  22,23,24 சிறப்பான நாட்களாக அமையும். ஆக.1,2ல் பொன், பொருள் கிடைக்கும்.

* நல்ல நாள்: ஜூலை 17,18, 19,22,23,24,29,30,31, ஆக.1,2,7,8,9,10,14,15  
* கவன நாள்: ஆகஸ்ட் 3,4 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,5
* நிறம்: மஞ்சள்,  நீலம்

* பரிகாரம்:
●  வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு நெய் தீபம்
●  செவ்வாயன்று முருனுக்கு பாலபிஷேகம்
●  சுவாதியன்று நரசிம்மர் கோயில் தரிசனம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !