பெண்ணேஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா
ADDED :4972 days ago
காவேரிப்பட்டணம் : காவேரிப்பட்டணம் பெண்ணேஸ்வரர் ஸ்வாமி கோவில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரரம் ஸ்ரீ வேதநாயகி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில் கடந்த ஜனவரி 29ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடந்தது. மண்டல பூஜை நிறைவு விழாவை முன்னிட்டு சிறப்பு ஹோமம் மற்றும் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. மாலையில் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் குருக்கள் மோகன்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.