உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்துார் மகா முனீஸ்வரர் கோயில்களில் கும்பாபிஷேக விழா

திருப்புத்துார் மகா முனீஸ்வரர் கோயில்களில் கும்பாபிஷேக விழா

திருப்புத்துார்:திருப்புத்துார் மேலரத வீதி பொக்கிஷ மாகாளியம்மன், மகா முனீஸ்வரர் கோயில் களில் கும்பாபிஷேகம் நடந்தது. ஜூலை12ல் யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து 2,3 ம் யாகபூஜைகள் நடந்தன. நேற்று (ஜூலை., 15ல்) காலை 6:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவுக்கு பின் காலை 10:00 மணிக்கு மூலவர் விமான கலசத்திற்கு புனிதநீரால் சிவாச்சார்யர்கள் கும்பாபிஷேகம் நடத்தினர்.

இளையான்குடி: மேலாயூர் அகர விநாயகர், அரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமம் செய்யப்பட்டது. காலை 10:00 மணிக்கு கோபுர கலசங்களிலும், மூலஸ்தானத்திலும், புனிதநீர் ஊற்றி கும்பாபிஷே கம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை செய்யப் பட்டது. தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !