உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதுகுளத்துார் கருங்காளி அம்மன் கோயில்களில் வருஷாபிஷேக விழா

முதுகுளத்துார் கருங்காளி அம்மன் கோயில்களில் வருஷாபிஷேக விழா

முதுகுளத்துார்:முதுகுளத்துார் அருகே காத்தாகுளம் கிராமத்தில் உள்ள செண்பூ கூத்த அய்யனார்,கருங்காளி அம்மன் கோயில்களில் உள்ள பரிவார தேவதைகளுக்கு வருஷா பிஷேக  விழா நடைபெற்றது.

யாகசாலை பூஜைகளுடன் துவங்கப்பட்டு பால்,சந்தனம்,பன்னீர் உள்பட 21 வகையான சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாரதனைகள் நடந்தது.செண்பூ கூத்த அய்யனார்,கருங்காளி அம்மன், பரிவார தேவதைகளுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபராதனைகள் நடைபெற்றது.

கிராமமக்கள் பத்து நாட்கள் விரதம் இருந்து பொங்கல் வைத்து மற்றும் கிடாவெட்டி நேர்த்திக் கடன் செலுத்தினர்.கிராமமக்கள் சார்பில் பொது அன்னதானம் நடந்தது.

இவ்விழாவில் முதுகுளத்துார் சுற்றியுள்ள கிராமமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இரவு 10.00 மணிக்கு வள்ளி திருமண நாடகம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !