உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொத்து யாருக்கு?

சொத்து யாருக்கு?

சொத்தை பிரிப்பதற்காக சகோதரர் இருவர், செய்யதுனா தாவூத் என்பவரின் உதவியை நாடினர்.  “எங்களின் தந்தை இறக்கும் போது, உங்களில் ஒருவனுக்கே என் சொத்து உரியதாகும் எனத் தெரிவித்தனர். எனவே, இந்த சொத்து யாரைச் சேரும்”  என, இருவரும் கேட்டனர்.  “தந்தையே! தாங்கள் அனுமதித்தால் இவர்களுக்கான தீர்ப்பை நான் வழங்குகிறேன்” என்றார் அருகில் நின்ற செய்யது சுலைமான், ’நல்ல தீர்ப்பு வழங்குக’ என்றார் செய்யதுனா.  “உங்களின் தந்தையை புதைத்த இடத்தை தோண்டி, அவரது எலும்பு ஒன்றைக் கொண்டு வாருங்கள்” என்றார் சுலைமான்.


இதைக் கேட்ட மூத்தவன் அழுதான். அவரது எலும்பு வேண்டுமென்றால், எனக்கு சொத்தே வேண்டாம்” என்றான். இளையவனோ ஓடிச் சென்று எலும்புடன் வந்தான். அவர்களிடம், “உங்கள் விரல்களில் குத்தி ரத்தத்தை அந்த எலும்பின் மீது விடுங்கள்” என்றார் சுலைமான். இருவரும் ரத்தத்தை விட்டனர். மூத்தவன் விட்ட ரத்தம் அந்த எலும்பில் பட்டதும் உறிஞ்சப்பட்டது. இளையவனின் ரத்தமோ வழிந்தோடியது.“மூத்தவரே இறந்தவருக்கு பிறந்தவர், அவருக்கே சொத்து சேரும்” என்றார் சுலைமான். இளையவன் வீட்டுக்கு ஓடி வந்து தாயிடம் நடந்ததை தெரிவித்தான். “மகனே! அவர் சொல்வது உண்மை தான். ஒருமுறை கொடியவன் ஒருவன் என்னுடன் சேர்ந்ததால் தான் நீ பிறந்தாய்”  எனத் தெரிவித்தாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !