மழை வேண்டி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை
ADDED :2282 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காமாட்சி அம்மனுக்கு மழை வேண்டி 108 குடம் பால் அபிஷேகம் நடத்தப்பட்டது. அதனையொட்டி, கோமுகி ஆற்றங்கரையில் சக்தி அழைத்தல் வைபவம் நடத்தி, ஊர்வலமாக காமாட்சி அம்மன் கோவிலை அடைந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தபின் 108 குடம் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. சித்தி விநாயகர், ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்மன், முருகன், தட்சணாமூர்த்தி, துர்க்கை, ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் சுவாமிகளுக்கு மழை வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. செவ்வாடை அணிந்து பக்தர்கள் பங்கேற்றனர். பெண் பக்தர்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.