உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாகாளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு

மாகாளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு

வெள்ளகோவில்: மாகாளியம்மன் கோவிலில் ஆடி 2 வது வெள்ளிக்கிழமை முன்னிட்டு புத்துக்கண் அவதாரத்தில் மாகாளியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

முன்னதாக மாகாளியம்மனுக்கு பால், தயிர், தேன், நெய், திருமஞ்சனம், உட்பட 18 திரவியங்களினால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வேப்பிலை கட்டி, புத்துக்கண் அமைத்து, சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு ராகி கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது. வருகின்ற ஆடி 18. சனிக்கிழமை, அன்று மயில்ரங்கம் அமராவதி ஆற்றில் மகாளியம்மனுக்கு ஆராட்டு நடக்கிறது. ஆகஸ்ட் 4 ம்தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு காலை மாகாளியம்மனுக்கு வளையல் அணிவித்து வளைகாப்பு நிகழ்ச்சி மற்றும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க உள்ளார்.ஏற்பாடுகளை திருக்கோவில் வழிபாட்டு குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !