விருதுநகரில் தேவாலயங்கள் சீரமைப்பு பணிக்கு உதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
விருதுநகர் : விருதுநகரில் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல், சீரமைத்தல் பணிகள் மேற்கொள்ள அரசு நிதி உதவி வழங்க உள்ளதால் இதற்கு விண்ணப்பிக்க கலெக்டர் சிவஞானம் கேட்டுள்ளார்.
அவரது செய்தி குறிப்பு: தமிழ்நாட்டில் சொந்த கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவால யங்களை பழுதுபார்த்தல், சீரமைத்தல் பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு நிதி உதவி வழங் கும் திட்டம் செயல்படுத்தி வருகிறது. இதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. உதவி பெற தேவாலயங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்க இருக்க வேண்டும். கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். சீரமைப்பு பணிக் காக வெளிநாட்டில் இருந்து எவ்வித நிதியும் பெற்றிருத்தல் கூடாது. விண்ணப்ப படிவம் www.bcmbcmw@tn.gov.in எனும் இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
உரிய ஆவணங்களுடன் எனக்கு(கலெக்டர்) விண்ணப்பிக்க வேண்டும். குழுவினர், தேவால யங்களை ஆய்வு செய்து கட்டட வரைபடம், திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதி அடிப் படையில் தேர்வு செய்வர். நிதியுதவி 2 தவணைகளாக தேவாலய வங்கி கணக்கில் வழங்கப் படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலு வலர்களை அணுகுமாறு, கேட்டுள்ளார்.