உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்

திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்

திட்டக்குடி:திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி கோவில் ஆடிப்பூர திருக்கல்யாண திருவிழா, நேற்று (ஜூலை., 25ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் (ஜூலை., 25ல்) இரவு 7மணிக்கு மேல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து வைத்தியநாத சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள அசனாம்பிகை அம்மன் சன்னதி முன்பு உள்ள கொடி மரத்தில், நேற்று காலை 9:00 மணியளவில் கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது.தொடர்ந்து 3ம் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

சிதம்பரம் சிதம்பரம் தச்சங்குளம் திவ்ய மகா மாரியம்மன் கோவில் ஆடி மாத செடல் உற்சவ கொடியேற்றம் நேற்று(ஜூலை., 25ல்) நடந்தது. இதனையொட்டி மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. கோவில் கொடிமரத்திற்கு பூஜை நடந்தது. ஆடி செடல் உற்சவ கொடியேற்றம் நேற்று 25ம் தேதி,காலை 11 மணிக்கு நடந்தது.மகா மாரியம்மன் ஊஞ்சல் உற்சவம் மாலையில் நடைக்கிறது. தினம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து இரவு அம்மன் வீதி உலா நடக்கிறது. வரும் 2ம் தேதி செடல் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !