கடலுார் பகவதி கழுத்து மாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா
ADDED :2322 days ago
கடலுார்:கடலுார் பகவதி கழுத்து மாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா வரும் 31ம் தேதி துவங்குகிறது.
கடலுார், மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை பகவதி கழுத்து மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா வை முன்னிட்டு, வரும் 31ம் தேதி காலை 8:00 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7:00 மணிக்கு புஷ்ப அலங்காரம், மகா தீபாராதனையும், 1ம் தேதி காலை 8:00 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7:00 மணிக்கு சந்தன அலங்காரம் நடக்கிறது.வரும் 2ம் தேதி காலை 8:00 மணிக்கு பெண்ணை ஆற்றில் இருந்து கரகம் கொண்டு வருதல், 11:00 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை, 12:00 மணிக்கு சாகை வார்த்தல், இரவு 7:00 மணிக்கு சந்தன அலங்காரம், இரவு வீதியுலா நடக்கிது.