விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம்
ADDED :2322 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப் பூரம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதை ஒட்டி, அம்மன் சன்னதியில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விநாயகர், அம்மன் உற்சவ மூர்த்திகள் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது. பின்னர், உற்சவ மூர்த்திகள் வீதியு லா நடந்தது. தினசரி அபிஷேக ஆராதனைகள் மற்றும் சுவாமிகள் வீதியுலா நடக்கிறது.வரும் 4ம் தேதி அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது.