புதுச்சேரி சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் ஞான பைரவருக்கு அபிஷேகம்
ADDED :2540 days ago
புதுச்சேரி:சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் சிவகால ஞான பைரவருக்கு அஷ்டமியை முன்னி ட்டு சிறப்பு பூஜை நடந்தது.லாஸ்பேட்டையில் சிவசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு அஷ்டமியை முன்னிட்டு, சிவகால ஞான பைரவர் சன்னிதியில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. பின், சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.திரளாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பைரவருக்கு படையலிடப்பட்ட பலவகையான இனிப்பு களும், கார வகைகளும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.