வில்வனேஸ்வர் கோவிலில் ஆடி கிருத்திகை வழிபாடு
ADDED :2322 days ago
வேப்பூர்: ஆடி மாத கிருத்திகையையொட்டி, நல்லுார் வில்வனேஸ்வர் கோவில் வடதிசை முருகனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
வேப்பூர் அடுத்த பிரபல நல்லுார் வில்வனேஸ்வர் கோவில் உள்ளது. இங்கு, முருகன் வீர கத்தி தோஷம் நீங்க மயூரா நதியில் நீராடி, வள்ளி தெய்வானையுடன் வட திசை நோக்கி சிவனை வழிபடுவதும், இந்திரன் மயிலாக காட்சி தருவதும் சிறப்பாகும். மேலும், திருமணம் தடை உள்ளவர்கள் வடதிசை முருகனை தரிசித்தால் திருமண தடை நீங்கும். தொடர்ந்து, ஆடி மாத கிருத்திகையையொட்டி, அதிகாலை முருகனுக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பின்னர், முருகனின் ஆறு முகங்களுக்கும் சிறப்பு ஹோமம் நடத்தி, ஆராதனைகள் செய்தனர். சுற்றுப்புற கிராம பக்தர்கள் திரளாக பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.