கீழக்கரை ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு விழா
கீழக்கரை: -ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அல்-குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராகீம் ஷஹீது பாதுஷா நாயகம் தர்கா மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா இன்று (ஜூலை 26) நடக்கிறது. இங்கு 845ம் ஆண்டு சந்தனக்கூட்டிற்கான மவுலீது எனும் புகழ்மாலை கடந்த கடந்த ஜூலை 4 தொடங்கியது.
ஜூலை 13 மாலை 5:00 மணிக்கு 40 அடி உயர அடிமரம் ஊன்றப்பட்டது. மறுநாள் மாலை 4:30 மணிக்கு ஏர்வாடி நல்ல இப்ராகீம் சந்தனக்கூடு தைக்காவில் இருந்து மேள தாளங்கள், வாண வேடிக்கை முழங்க தர்கா வரை ஊர்வலமாக வந்தனர்.குதிரைகள், யானை முன்னே செல்ல ரத ஊர்வலம் தர்காவை மூன்று முறை சுற்றி வலம் வந்து ஹக்தார் நிர்வாகத்தினரால் கொடியேற் றம் செய்யப்பட்டது.
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இவ்விழாவில் அனைத்து சமுதாய மக் களும் பங்கேற்றனர்.இன்று (ஜூலை 26) மாலை 4:00 மணிக்கு சந்தனக்கூடு விழா துவங்கு கிறது. நாளை (ஜூலை 27) அதிகாலை 4:00 மணிக்கு மக்பராவில் புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது. ஆக., 2 வெள்ளியன்று மாலையில் கொடியிறக்கம் செய்யப்படும். இதற்கான ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் பொதுமகா சபையினர் செய்து வருகின்றனர்.